வெல்லவாய – மொனராகலை வீதியில் உள்ள கிரிந்தி ஓயா பாலம் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் காயமடைந்த இரு ஓட்டுநர்களும் வெல்லவாய பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில், வெல்லவாய பகுதியைச் சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான 53 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த மற்றொருவர் மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், இந்த விபத்து குறித்து வெல்லவாயா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














