பிரேசில் விங்கர் வீரரான சவின்யோவை (Savinho), மான்செஸ்டர் சிட்டி அணியிலிருந்து டொட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் (Tottenham Hotspur) அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த இடமாற்றத்தை இரு கழகங்களும் திங்கட்கிழமை (25) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தின.
எனினும், ஒப்பந்தத்தின் காலஅளவு மற்றும் நிதி விவரங்கள் வெளியிடப்படவில்லை.
ஆனால், பிரித்தானிய ஊடகங்களின் தகவலின்படி, இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 75 மில்லியன் பவுண்டுகள் எனவும், மேலும் 10 மில்லியன் பவுண்டுகள் வரையிலான கூடுதல் ஊக்கத் தொகைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பயிற்சியாளர் ரொபெர்டோ டி செர்பியின் (Roberto De Zerbi) தலைமையில் டொட்டன்ஹாம் அணி கோடைக்கால இடமாற்றச் சந்தையில் இதுவரை 300 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் செலவிட்டுள்ளது.
தற்போது தனது அணியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் டொட்டன்ஹாம் அணி தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.













