யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், நா.வர்ணகுலசிங்கம் அவர்களின் விசேட கோரிக்கைக்கு அமைவாக, அக்கரைப்பகுதி மீனவர்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகரகத்தினால் மீன்பிடி உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
காலை 10:30 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில், தலா 25,000 ரூபாய் பெறுமதியான கடற்றொழில் உபகரணங்கள் 20 மீனவர்களுக்கு யாழ் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி வழங்கி வைத்தார் இந் நிகழ்வில் அக்கரை மீனவர் சங்கங்களின் உறுப்பினர்கள் பயனாளிகள் இந்திய துணை தூதரகத்தின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.













