நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா அருகில் அபாயகரமான வளைவு பகுதியில் தொடர்ச்சியாக மூன்று பாரிய விபத்து எற்பட்டு ஒரு உயிரிழப்பு மற்றும் பலர் காயமடைந்துள்னர்.
குறித்த விபத்து ஏற்பட்ட இடமானது இறுதியில் திட்வா சூறாவளி காரணமாக ஹக்கல பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வீதிகள் சேதமடைந்து தாழிறங்கிய பகுதியில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.
முதலில் நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கி அபாயகரமான வளைவு பகுதியில் அதிக சுமைகளை ஏற்றிக் கொண்டு பயணித்த கனரக வாகனத்தில் திடீரென்று தடையாழி (பிரேக்) செயலிழந்தில் குறித்த விபத்தில் நான்கு வாகனங்களும் பலத்த சேதமடைந்த போதிலும்இ வாகனங்களில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
இரண்டாவதாக ஹக்கல தாவரவியல் பூங்கா பகுதியில் வீதி ஓரத்தில் நடந்து சென்ற ஒருவர் மீது பேருந்து மோதியதில் 46 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூன்றாவாதாக அதே இடத்தில் (02) நேற்று மாலை இ.போ.ச பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு விபத்துகளால் சிலர் உடல் அவயங்களையும் இழந்துள்ளனர். எனவே இனியும் விபத்துகள் இடம்பெறுவதை தடுப்பதற்காக நிலச்சரிவுகள் ஏற்பட்டு வீதிகள் சேதமடைந்து தாழிறங்கிய பகுதியில் வீதியை அகலப்படுத்திக்கொடுப்பதற்கும், குன்றும் குழியுமாக காணப்படும் பகுதிகளை புனரமைப்பதற்கும் சம்பந்தப்பட்ட தரப்புகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதற்கு முன்னரும் இவ்வீதியை அகலப்படுத்துமாறு பல தடவைகள் கோரியிருந்தோம் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் எதிர்திசையில் வரும் வாகனத்துக்கு இடம் கொடுப்பதற்குகூட பெரும் சிரமம். இதற்கு முன்னரும் விபத்துகள் இடம்பெற்றுள்ளன எனவும் இதனால் அப்பகுதி மக்கள் கவலையுடனும் கொதிப்படைந்த நிலையிலும் காணப்படுகின்றனர்













