அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிறப் பின்னணியைக் கொண்ட பதிவு எண்கள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளதாகவும், அவற்றின் சட்டப்பூர்வ செல்லுபடியை ஆணையாளர் ஜெனரல் ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் துஷாரா பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனைய வாகனங்களுக்குத் தொடர்ந்து வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத் தகடுகள் வழங்கப்படும் என்றும் ஆணைாயளர் துஷார பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
2026 ஜூன் 10 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட 56,233 வாகனங்கள் மற்றும் 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 32,507 வாகனங்கள் என மொத்தம் 88,740 பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான புதிய இலக்கத் தகடுகள் (number plates) தயாரிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
வாகன உரிமையாளர்கள் நாரஹென்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அலுவலகத்திலிருந்து தங்கள் வாகனத் தகடுளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.













