• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

Hanushya P by Hanushya P
2026/09/14
in இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பில் சுருக்கு வலை பாவித்து சிறிய முரல் மீன் பிடிப்பதற்கான அனுமதி பத்திரம் வழங்குவதற்காக ஒரு படகு உரிமையாளரிடம் இருந்து 35 ஆயிரம் ரூபா வீதம் 20 படகு உரிமையாளர்களிடம் இருந்து சுமார் 7 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கடற்றொழில் நீரியல் வள திணைக்கள உத்தியோகத்தர்கள் வாங்கியுள்ளனர். எனவே மீன்பிடி அமைச்சர் உடன் விசாரணை செய்து அந்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் ஊடக பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் தலைவர் ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான முத்துலிங்கம் தலைமையிலான ஊடக மாநாடு இன்று பாலமீன்மடு வில் இடம்பெற்றது இதன்போது ஊடக பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.

எமது பிரதேச மீனவர்கள் நீண்டகாலமாக சுருக்குவலை பாவித்து சிறிய முரல் மீன் பிடித்து வந்த நிலையில் இதற்கான அனுமதி பத்திரம் வழங்குமாறு மீனவர்கள் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் வைத்த கோரிக்கைக்கு அமைவாக நாரா நிறுவனம் கள விஜயத்தை மேற்கொண்டு மீனவர்களிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த முரல் மீன் பிடிப்பதற்கான சுருக்கு வலை பாவிப்பதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.

இதையடுத்து நாரா நிறுவனம் இதனால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அறிக்கை சமர்ப்பித்த பின்னர் சிறிய முரல் பிடிக்க சுருக்கு வலை பாவித்து மீன் பிடிப்பதற்கான அனுமதி பத்திரத்தை கடந்த 2025ம் ஆண்டு கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் மீனவர்களுக்கு வழங்கியது

இந்த நிலையில் 2026 ம் ஆண்டிற்கான அனுமதி பத்திரத்தை கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் புதுப்பித்துக் கொடுக்க வேண்டும். இருந்தபோதும் இந்த அனுமதி பத்திரத்தை புதுப்பிக்காமல் மீனவர்களுக்கு பொய்களை கூறி அச்சுறுத்தி மீண்டும் நாரா நிறுவனம் வந்து பரிசோதனை செய்ய வேண்டும் கடற்படை அதிகாரிகள் வந்து பார்க்க வேண்டும் என இந்த வருடம் ஜனவரி மாதம் புதுப்பித்துக் கொடுக்க வேண்டிய அனுமதி பத்திரத்தை புதுப்பித்து கொடுக்காமல் 6 மாதம் வரை வைத்துள்ளனர்.

அதன் பின்னர் அனுமதி பத்திரத்தை புதுப்பிக்க ஒரு படகு உரிமையாளரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபா இலஞ்சமாக கப்பமாக கடற்றொழில் நீரியவள திணைக்கள உத்தியோகத்தர்கள் கோரியுள்ளதையடுத்து படகு உரிமையாளர்கள் ஏதோ வகையில் இந்த அனுமதியை பெற்றுக்; கொள்வதற்காக 50 ஆயிரம் தர முடியாது என தெரிவிதனர்.

அதன் பின்னர் தமது குடும்பத்தினரது தங்க ஆபரணங்களை ஈடுவைத்து ஒரு படகுக்கு 35 ஆயிரம் ரூபாவை கொடுக்க முன்வந்து ஒரு படகு உரிமையாளர் 35 ஆயிரம் ரூபா வீதம் 20 படகுகளுக்கான 7 இலட்சம் ரூபாய் பணத்தை கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சமாக வழங்கி அதற்கான அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொண்டனர்.

அதேவேளை பணம் இல்லாத மீனவர் ஒருவர் தனது தங்க நகைகளை ஈடுவைத்து இரண்டு படகுகளுக்கான அனுமதி பத்திரத்தை பெறுவதற்காக 70 ஆயிரம் ரூபாவை வழங்கிய போதும் அவருக்கான அனுமதிப்பத்திரம் இதுவரை வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட அவர் எழுத்து மூலமாக இவ்வாறு கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் இலஞ்சமாக பணம் வாங்கியதாக எமது மோசடி ஊழலுக்கு எதிரான அமைப்புக்கு வழங்கியுள்ளார்.

மீனவர்கள் சுட்டெரிக்கும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் தமது வாழ்வாதாரத்துக்காக எரிபொருள் விலை ஏற்றத்தின் மத்தியில் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனர் இவ்வாறான நிலையில் அனுமதி பத்திரம் வழங்க பெரும் தொகை இலஞ்சமாக பணம் வாங்கிய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக மீன்பிடி அமைச்சர் மீனவர்களின் நலன் கருதி மீனவர்களிடம் இலஞ்சப் பணம் வாங்கிய உத்தியோகத்தர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு மீனவர்களிடம் இலஞ்மாக வாங்கிய பணத்தை மீனவர்களிடம் மீண்டும் திருப்பி கொடுக்க வேண்டும் அத்துடன் பணம் இல்லாது அனுமதி பத்திரம் பெறமுடியாது உள்ள ஒரு சில மீனவர்களுக்கும் இந்த அனுமதி பத்திரத்தை வழங்க வேண்டும் என்பதுடன் 70 ஆயிரம் கொடுத்து இதுவரை அனுமதி பத்திரம் வழங்காத அவருக்கு அனுமதி பத்திரத்தை வழங்கி அந்த பணத்தை மீள பெற்றுக் கொடுக்க வேண்டும். என அமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

Related

Tags: 000 rupees20 boat ownersapproximately 700Aquatic ResourcesDepartment of Fisheriesofficials
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

Related Posts

UPDATE : வெளியேறினார் நாமல்
இலங்கை

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

2026-09-14
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !
இலங்கை

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

2026-09-14
தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்; இருவர் கைது!
இலங்கை

தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்; இருவர் கைது!

2026-09-14
பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 05 பேர் உயிரிழப்பு!
இலங்கை

பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 05 பேர் உயிரிழப்பு!

2026-09-14
எரிபொருள் விலை மாற்றம் குறித்து மாத இறுதியில் முடிவு!
இலங்கை

எரிபொருள் விலை மாற்றம் குறித்து மாத இறுதியில் முடிவு!

2026-09-14
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

புத்தூரில் வயோதிபப் பெண் கொலை!

2026-09-14

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

0
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

0
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

0
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

0
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.