கொங்கோ ஜனநாயகக் குடியரசில் விமானம் ஒன்று தீப்பிழம்பாக வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்துள்ளனர்.
இராணுவ விமானம் ஒன்று சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் உயர் அதிகாரிகளும் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிக்விட் நகரிலிருந்து தலைநகர் கின்ஷாசாவிற்குச் சென்று கொண்டிருந்தபோது, அந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து விமானி அவசரத் தரையிறக்கம் செய்ய முயன்றார், ஆனால் அந்த விமானம் தென்மேற்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசின் (DRC) குவாங்கோ மாகாணத்தில் உள்ள கெங்கே (Kenge) பகுதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.















