கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமைக்காக இலங்கை கிரிக்கெட் வீரர் சமிக கருணாரத்னவைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமிக கருணாரத்னவுக்கு எதிரான வழக்கு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவர் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் கசுன் காஞ்சன தஸநாயக்க உத்தரவிட்டார்.
எனினும், சமிக கருணாரத்னே தற்போது 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தேசியப் பணிக்காக ஜப்பானில் உள்ளார்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தேசியப் பணி நிமித்தமான அவரது வருகையின்மை குறித்து நீதிமன்றத்திற்குச் சரியாகத் தெரிவிக்கப்படாததே, அவர் நேரில் முன்னிலையாகத் தவறியமைக்காக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்படக் காரணமாக அமைந்ததாக அறியப்படுகிறது.
இவ்வழக்கு அக்குழந்தைக்கான பராமரிப்புத் தொகை கோரும் விவகாரம் தொடர்பானது.
அக்குழந்தையின் தந்தை தான் என்பதை சமிக கருணாரத்ன மறுத்துள்ளார்.
குழந்தைக்கான பராமரிப்புத் தொகையைச் செலுத்துமாறு கருணாரத்னேவுக்கு உத்தரவிடக் கோரி இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு 2027 ஜனவரி 4 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
















