அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று குழந்தைகளும் ஆசிரியர் ஒருவரும் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலை 16 வயது இளைஞர் ஒருவர் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் சந்தேகநபர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூட்டப்பட்டிருந்த கதவுகளை நோக்கி துப்பாக்ச் சூடு நடத்திய, சந்தேக நபர் பாடசாலைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் பாடசாலைக்குள் நுழைவதைக் கண்ட உள்ளூர்வாசி ஒருவர், அவரைத் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதன் மூலம் தாக்குதலை முறியடித்ததாக பெண்ட் நகர பொலிஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.


















