இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
கடந்த வாரம் புதுடெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் திரண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள், போலீசாரின் தடுப்புவேலிகளைத் தாண்டி அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியதுடன், பாதுகாப்புப் படையினருடனும் முரண்பாட்டில் ஈடுபட்டனர்.
வேலையின்மை, வினாத்தாள் கசிவுகள், வாக்காளர் பட்டியல் திருத்தங்கள் மற்றும் கல்வித் துறை முறைகேடுகள் ஆகியவை இந்தப் போராட்டங்களுக்கான முக்கிய காரணங்களாகக் சுட்டிக்காட்டப்படுகின்றன.
இதனிடையே, இந்த ஆண்டில் இந்தியாவில் இடம்பெறும் வீதிப் போராட்டங்கள், கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிக்கக்கூடும் என உலகளாவிய மோதல் நிலவரங்களைக் கண்காணிக்கும் ‘ஏ.சி.எல்.இ.டி’ (ACLED) அமைப்பு எச்சரித்துள்ளது.
இருப்பினும், தேர்தல் வெற்றிகளில் முறைகேடு இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் இந்தியத் தேர்தல் ஆணையமும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளன.

















