பிரித்தானியாவில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், புதிய பயிற்சித் திட்டமொன்றை
அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி, 25 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களுக்குப் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள், தற்போதைய நிலையைவிட 25
வீதம் அதிக செலவைச் செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம், இளைஞர்களைப் பணியில் அமர்த்திப் பயிற்சி வழங்குவதற்கு, நிறுவனங்களை ஊக்குவிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

















