இந்தியாவும் வொஷிங்டனும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும், அந்த ஒப்பந்தம் முந்தைய ஒப்பந்தங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (20) தெரிவித்தார்.
வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் மக்களுக்கிடையிலான உறவுகள் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க, வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இந்தியாவுக்கு விஜம் மேற்கொண்டுள்ள சூழலில், ட்ரம்ப் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
இதற்கிடையில், இந்தியாவில் செய்தியாளர்களிடம் பேசிய ரூபியோ, ஒபந்தந்தம் தொடர்பில் இறுதி செய்யப்பட வேண்டிய சில சிறிய விடயங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன என்றும், அவை விரைவில் இறுதி செய்யப்படும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில், வர்த்தக ஒப்பந்தத்தின் நுணுக்கமான அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக, இந்தியாவின் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மில்வாக்கி மற்றும் வொஷிங்டனில் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீரைச் சந்தித்தார்.
இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் (BTA) முதல் கட்டத்திற்கான கட்டமைப்பை இறுதி செய்துள்ளதாக இந்தியாவும் அமெரிக்காவும் பெப்ரவரி மாதம் அறிவித்தன.
இருப்பினும், அமெரிக்காவில் வரி விதிப்புச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, இந்த ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
















