• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ஷதாபின் அதிரடி ஆட்டம்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்!

ஷதாபின் அதிரடி ஆட்டம்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/10/26
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

லாகூரில் ஞாயிற்றுக்கிழமை (25) நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் அவர்கள் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். 

ஆட்டத்தில் பாகிஸ்தான் சகலதுறை வீரர் ஷதாப் கான் ஆட்டமிழக்காமல் 113 ஓட்டங்கள் அடித்ததுடன், ஹாரிஸ் ரவுஃபுடன் இணைந்து இறுதி விக்கெட்டுக்கு சாதனை அளவாக 89 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை அமைத்தார். 

இதன்மூலம், 154-9 என்ற நிலையில் இருந்து மீண்டெழுந்த பாகிஸ்தான் அணி 47.1 ஓவர்களில் ஒரு விக்கெட் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கினை கடந்தது.

லாகூர், கடாஃபி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சினைத் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடுவதற்காக இங்கிலாந்து அணி களமிறங்கியது.

போட்டியின் முதல் ஓவரிலேயே டாம் பேன்டனை ஆட்டமிழக்கச் செய்த அஃப்ரிடி, மூன்றாவது ஓவரில் ஜோ ரூட்டையும் வீழ்த்தினார். 

அதே நேரத்தில், ஹாரிஸ் ரவுஃபிடம் ஜோர்டான் காக்ஸ் ஆட்டமிழந்ததால், இங்கிலாந்து அணி 52 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பென் டக்கெட் மற்றும் சாம் கரண் ஐந்தாவது விக்கெட்டுக்கு 93 ஓட்டங்கள் சேர்த்து இன்னிங்ஸை நிலைப்படுத்தினர். 

அஃப்ரிடியின் மூன்றாவது விக்கெட்டாக வீழ்வதற்கு முன்பு கரண் 42 ஓட்டங்கள் எடுத்திருந்தார். 

ஜேமி ஓவர்டன் இங்கிலாந்து அணியை 200 ஓட்டங்கள் கடக்க உதவினார், அதே நேரத்தில் கஸ் அட்கின்சன் 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பென் டக்கெட் நிதானமாக விளையாடி 105 ஓட்டங்கள் எடுத்த போதிலும், போட்டியில் இங்கிலாந்து அணி 46.4 ஓவர்களில் 241 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. 

பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் ஷா அப்ரிடி சிறப்பாகப் பந்துவீசி, 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, இங்கிலாந்தின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களை வீழ்த்தினார்.

பின்னர் வெற்றிக்குத் தேவையான 242 துரத்திய பாகிஸ்தான், ஃபகர் ஜமான் மற்றும் பாபர் அசாம் ஆகியோரை தலா 10 ஓட்டங்களுக்கு இழந்தது. 

பின்னர், சாத் பெய்க் 22 பந்துகளில் 32 ஓட்டங்களும், சல்மான் அலி ஆகா 26 ஓட்டங்களும் எடுத்து, இலக்கை விரட்டும் முயற்சியை சிறிது நேரம் மீட்டெடுத்தனர்.

103 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறிக் கொண்டிருந்தபோது, ​​24வது ஓவரில் ஷதாப் கான் களமிறங்கினார்.

13 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களை அடித்திருந்த ஷதாப், வெற்றிக்கு 21 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் அட்கின்சனின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

ஆனால், ரீப்ளேக்களில் பந்து உள் விளிம்பில் பட்டது தெரியவந்ததால், அவர் அந்த முடிவை வெற்றிகரமாக மறுபரிசீலனை செய்தார். 

34 ஆவது ஓவரில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அவர்களை 154-9 என்ற நிலைக்குச் சுருக்கியதால், தோல்வியின் விளிம்பில் இருந்தது.

இருப்பினும், ஷதாப் அபாரமான எதிர் தாக்குதலை நடத்தினார். 

அவருடன் இணைந்து ரவூஃப் 19 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 7 ஓட்டங்களைச் சேர்க்க, அந்த அணி 17 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றியை எட்டியது. 

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், வெற்றிகரமான இலக்கு துரத்தலின் போது கடைசி விக்கெட்டுக்காக இவர்கள் அமைத்த 89 ஓட்டங்கள் கூட்டணியே மிக உயர்ந்த கூட்டணியாக அமைந்தது.

Image

Related

Tags: EnglandPakistanShadab Khanஇங்கிலாந்துபாகிஸ்தான்லாகூர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரபுதேவா – சிம்ரன் இணையும் புதிய படம் ‘கமல் ஸ்ரீதேவி’!

Next Post

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 சிறுவர்கள் உட்பட 12 பேர் காயம்!

Related Posts

உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
இலங்கை

உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

2026-10-26
தனியார் எரிபொருள் நிலையங்களிலும் விலை உயர்வு!
இலங்கை

தனியார் எரிபொருள் நிலையங்களிலும் விலை உயர்வு!

2026-10-26
களுத்துறை இரட்டைக் கொ*லை: நபரொருவர் கைது!
இலங்கை

களுத்துறை இரட்டைக் கொ*லை: நபரொருவர் கைது!

2026-10-26
சூறாவளியின் தாக்கத்தால் இலங்கையில் கனமழை!
ஆசிரியர் தெரிவு

சூறாவளியின் தாக்கத்தால் இலங்கையில் கனமழை!

2026-10-26
200 மின்சார பேருந்துகளைக் கொள்வனவு செய்யும் திட்டம் தாமதம் – கணக்காய்வில் வெளியான தகவல்!
இலங்கை

200 மின்சார பேருந்துகளைக் கொள்வனவு செய்யும் திட்டம் தாமதம் – கணக்காய்வில் வெளியான தகவல்!

2026-10-25
வாகனங்களுக்கான வீதித் தகுதிச் சான்றிதழ் – இறுதி முடிவு இன்னும் இல்லை!
இலங்கை

வாகனங்களுக்கான வீதித் தகுதிச் சான்றிதழ் – இறுதி முடிவு இன்னும் இல்லை!

2026-10-25
Next Post
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 சிறுவர்கள் உட்பட 12 பேர் காயம்!

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 சிறுவர்கள் உட்பட 12 பேர் காயம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 சிறுவர்கள் உட்பட 12 பேர் காயம்!

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 சிறுவர்கள் உட்பட 12 பேர் காயம்!

0
ஷதாபின் அதிரடி ஆட்டம்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்!

ஷதாபின் அதிரடி ஆட்டம்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்!

0
பிரபுதேவா – சிம்ரன் இணையும் புதிய படம் ‘கமல் ஸ்ரீதேவி’!

பிரபுதேவா – சிம்ரன் இணையும் புதிய படம் ‘கமல் ஸ்ரீதேவி’!

0
நான்காவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார் லுலா!

நான்காவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார் லுலா!

0
மெக்சிகோவில் வித்தியாசமான வேடங்களில் அணிவகுத்த சிஹுவாவா நாய்கள்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: