சவூதிபுரோ லீக் போட்டிகள் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவருகிறது. தனது 1000வது கோலினை குறிவைத்து கிறிஸ்டியானோ ரோனால்டோவும் ஆக்ரோஸமாக கோல்களை பதிவு செய்து வருகிறார்.
அந்தவகையில் கடந்த வியாழக்கிழமை அல்நசார் அணி அல் கோலூட் அணியுடன் பலப்பரீட்சை நடாத்தியது. போட்டி தொடங்கியதிலிருந்து ஆட்டத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த அல்நசார் அணிக்கு போட்டியின் 10வது நிமிடத்தில் முதல் கோலினை பதிவு செய்யும் வாய்ப்பு கிட்டியது இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவ்வணியின் தலைவரும் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரோனால்டோ கோலினை பதிவு செய்து அசத்தினார்.
ஆனால் நடுவரால் அது OFFSIDE என அறிவிக்கப்பட்டது. இருந்தும் நடுவர் மீண்டும் அதனை VAR தொழில்நுட்பத்தில் சரி பார்த்து அதனை உறுதிசெய்தார். இதனால் ரோனால்டோ அதிர்ச்சியில் உரைந்தார்.
அதனை விட அதிர்ச்சியாக அடுத்த சில நிமிடங்களில் அதாவது 16வது நிமிடத்தில் அல் கோலூட் அணியின் நட்சத்திர வீரர் ஜீலியன் டொமின்கஸ் தனது அணியை 1-0 என முன்னிலைப்படுத்தி அசத்தினார்.
அல்நசார் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் அதிர்ச்சியில் உரைந்தனர்.
இருந்தும் போட்டியின் 24வது நிமிடத்தில் பிரேசில் அணியின் இளம் நட்சத்திரமான அஞ்சலோ கேப்ரியல் அல்நசார் ரசிகர்களை திருப்திபடுத்தினார். இதனால் போட்டி 1-1 என சமநிலையானது.
பின்னர் போட்டியின் 38வது நிமிடத்தில் நம்பிக்கை நாயகன் சாடியோ மானே தனது ஸ்டைலில் அணியின் கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார். இதனால் 2-1 என அல்நசார் அணி முதல் பாதியில் முன்னிலைப்பெற்று அசத்தியது.
இருந்தும் முதல் பாதி முடிவடைய ஒரு நிமிடம் இருந்த நிலையில் இலகுவான வாய்ப்பு அல் கோலூட் அணிக்கு கிடைக்க அதனை அன்டோய்ன் எஸ்சோம்போ கோலாக மாற்றி 2-2 என போட்டியை சமப்படுத்தி அசத்தினார்.
இந்நிலையில் மீதமிருந்த ஒரு நிமிடத்தில் கிடைத்த மற்றுமொரு வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய ரோனால்டோ தனது அணியின் கோல் எண்ணிக்கையை 3க உயர்த்தி எதிரணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் அடுத்த செக்கனே நடுவர் அதனை OFFSIDE என அறிவித்தார். இதனால் முதல் பாதியை இரு அணிகளும் வெற்றிக்கொண்டன,
இந்நிலையில் தீர்க்கமான இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் மீண்டும் ஆதிக்கத்தை தொடர்ந்தது அல்நசார் அணி இந்நிலையில் போட்டியின் 66வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை மீண்டும் கோலாக மாற்றி அணியை 3-2 என முன்னிலைப்படுத்தி அசத்தினார் கிறிஸ்டியானோ, இம்முறை நடுவரால் அதனைOFFSIDE என அறிவிக்க முடியவில்லை
இதனால் அவரின் 3வது முயற்சி கோல் அணியின் 3வது கோலாக மாற்றம் பெற்றது.
பின்னர் போட்டியின் 72வது நிமிடத்தில் மீண்டும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரோனால்டோ தனது வழக்கமான ஹெட்டர் மூலம் தனது இரண்டாவது கோலினை பதிவு செய்து அசத்தினார்.
இதனால் அல்நசார் அணி 4-2 என முன்னிலைப்பெற்றது.
அதன்பின்னரும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்த கிறிஸ்டியானோ ரோனால்டோ போட்டியின் 81வது நிமிடத்தில் ஹெட்ரிக் கோலினை பதிவு செய்து அசத்தினார்.
இதனால் அல்நசார் அணியின் கோல் எண்ணிக்கை 5க உயர்ந்தது.
15 நிமிடங்களுக்குள் 3 கோல்களை பதிவு செய்து ரோனால்டோ குறித்த போட்டியில் ஹெட்ரிக் சாதனை படைத்தார்.
பின்னர் போட்டியின் கடைசி தருணத்தில் அல் கோலூட் அணிக்கு பெனால்ட்டி வாய்ப்பு கிட்டியது அதனை கோலாக மாற்றி ஜீலியன் டொமின்கஸ் தனது இரண்டாவது கோலினை பதிவுசெய்ததுடன் அணியின் கோல் எண்ணிக்கையை 3க உயர்த்தினார்.
இறுதியில் அல்நசார் அணி 5-3 என வெற்றிப்பெற்று அசத்தியது.















