போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 208 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எப். யூ.வுட்லர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் சுமார் 1,500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் திணைக்களத்திற்குள் ஊழல் மற்றும் தகுதியற்ற உத்தியோகத்தர்கள் இருப்பதை ஏற்றுக்கொண்ட அவர், அவ்வாறானவர்களை அடையாளம் கண்டு சேவையிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தகுதியற்றவர்கள் பொலிஸ் திணைக்களத்திற்குள் இருப்பது மட்டுமன்றி, அவர்களை அடையாளம் கண்டு அகற்றுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.













