வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில், பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காலை வேளையில், மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் பனிமூட்டமான சூழல் நிலவக்கூடும்.
காற்று:
நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் காற்று வடகிழக்கு திசையிலிருந்து வீசும். காற்றின் வேகம் மணிக்கு 20-30 கிலோமீட்டராக இருக்கும்.
கடல் நிலை:
நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் மிதமான நிலையில் காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின் போது, தற்காலிகமாக பலத்த காற்று (மணிக்கு 60-70 கிலோமீட்டர் வேகத்தில்) வீசக்கூடும் மற்றும் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம்.













