பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர், இன்று (09) ராவல்பிண்டியில் தொடங்கியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 3-0 என்ற கணக்கில் முழுமையாகத் தோல்வியடைந்த பின்னர், பாகிஸ்தான் விளையாடும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும்.
அந்த இங்கிலாந்து தொடரின் போது, பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த ஏழு வீரர்கள் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு நாடு திரும்பியிருந்தனர்.
மூத்த விக்கெட் காப்பாளர் மொஹமட் ரிஸ்வான், முன்னாள் தலைவர் ஷான் மசூத் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களான சாஜித் கான், நோமன் அலி ஆகியோர் அணியில் இடம்பெறாத முக்கிய வீரர்களில் அடங்குவர்.
மொஹமட் தாஹா, சாத் பைக், தய்யப் ஆரிஃப், சமீர் மின்ஹாஸ், சாகிப் கான் மற்றும் அலி ஷப்பீர் ஆகியோர் முதன்முறையாக டெஸ்ட் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், தனஞ்சய டி சில்வாவிடமிருந்து தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள வெள்ளைப்பந்து அணித் தலைவர் குசல் மெண்டிஸின் தலைமையில் இலங்கை ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளது.
தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், பாகிஸ்தான் ஒன்பதாவது இடத்திலும், இலங்கை ஏழாவது இடத்திலும் உள்ளன.
இன்று காலை ஆரம்பமான இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் 16 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ஓட்டங்களை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.














