உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் அமைந்துள்ள இரண்டு முக்கியப் பாலங்கள் மீது ரஷ்யப் படைகள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
டினீப்பர் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள வடக்கு மற்றும் தெற்கு பாலங்கள் இந்தத் தாக்குதல்களில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நகரின் சில பகுதிகளில் நீர், மின்சாரம் மற்றும் வெப்பமூட்டும் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், கீவ் நகரின் மெட்ரோ ரயில் கட்டமைப்பும் சேதமடைந்துள்ளதாக நகர மேயர் விட்டலி கிளிட்ஸ்கோ தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் ஏனைய பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.














