பிரித்தானியாவில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் வேலையின்மைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண அரசாங்கம் புதிய சீர்திருத்தத் திட்டங்களை முன்வைத்துள்ளது.
நாட்டில் சுமார் ஒரு மில்லியன் இளைஞர்கள் கல்வி, தொழில் அல்லது தொழிற்பயிற்சி வாய்ப்புகள் இன்றி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதுடன், தொழிற்பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளையும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2036ஆம் ஆண்டுக்குள் பெருமளவிலான இளைஞர்களை வேலைவாய்ப்புகளில் இணைப்பதே இலக்காகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் முக்கியத்துவம் பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.













