முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிச் செயலாளராகப் பணியாற்றிய சுகீஸ்வர பண்டார, பிணையில் விடுவிக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று (18) அவர் கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக திரு. சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.













