• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கை – தாய்லாந்து இடையில் கைச்சாத்தான விசா விலக்கு ஒப்பந்தம்!

இலங்கை – தாய்லாந்து இடையில் கைச்சாத்தான விசா விலக்கு ஒப்பந்தம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/11/23
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தாய்லாந்து பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் புவாங்கெட்கியோவ் (Sihasak Phuangketkeow) நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தார்.

கண்டி அஸ்கிரி மகா விகாரையில் நடைபெறும் அரச கடின சீவர பூஜை புண்ணிய உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் அரச பிரதிநிதியாக சிஹாசக் புவாங்கெட்கியோவ் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த தாய்லாந்து பிரதிப் பிரதமரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மிகவும் சிநேகபூர்வமாக வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து, இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் நிலவும் நீண்டகால கலாசார மற்றும் மத ரீதியான உறவுகளை நினைவுகூர்ந்தவாறு ஜனாதிபதியும் தாய்லாந்து பிரதிப் பிரதமரும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான வரலாற்று ரீதியான மத மற்றும் கலாசார உறவுகள் இவ்வாறான இராஜதந்திர விஜயங்களின் மூலம் மேலும் வலுப்பெறும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது குறிப்பிட்டார்.

தாய்லாந்து பிரதமரும் இலங்கைக்கு விஜயம் செய்ய விருப்பத்துடன் உள்ளதாக பிரதிப் பிரதமர் இதன்போது குறிப்பிட்டதுடன், அடுத்த வருடம்  ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹெராவை பார்வையிடுவதற்காக இலங்கைக்கு வருகை தருமாறு தாய்லாந்து பிரதமருக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, விவசாயம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாகவும் இரு நாட்டுத் தலைவர்களும் இதன்போது கலந்துரையாடினர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா  நடவடிக்கைகளை எளிதாக்குதல் மற்றும் மக்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு ஒப்பந்தமொன்றும் இதன்போது தாய்லாந்து பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் புவாங்கெட்கியோவ் மற்றும் இலங்கையின் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா  அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளினதும் சுற்றுலாத்துறையின் மேம்பாட்டிற்கும், வர்த்தக உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும் வாய்ப்பாக அமையும் என தாய்லாந்து பிரதிப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

விசேடமாக விவசாயத் துறைக்குத் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்க தாய்லாந்து தயாராக இருப்பதாகவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதற்காகச் செயற்பட முடியும் என்றும் தாய்லாந்து பிரதிப் பிரதமர் தெரிவித்தார்.

தாய்லாந்தில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களின் நலன்புரி விடயங்கள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. தமது நாட்டுப் பிரஜைகளை நடத்துவதைப் போன்றே வெளிநாட்டுத் தொழிலாளர்களையும் நடத்துவதாக வலியுறுத்திய தாய்லாந்து பிரதிப் பிரதமர், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி தொடர்பில் எவ்வித சிக்கலும் ஏற்படாது  என்றும் அது தொடர்பில் கவலை கொள்ளத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு தாய்லாந்து பிரதிப் பிரதமர்,அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவி செனெவிரத்ன, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா பிரிவின் பணிப்பாளர் நாயகம் சமரி ரொட்ரிகோ ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

தாய்லாந்து அரசாங்கத்தின் சார்பில் இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் பைட்டூன் மஹாபன்னபோர்ன் (Paitoon Mahapannaporn), வெளிவிவகார அமைச்சரின் செயலாளர் போர்ன்போங் கனித்தானோன் (Pornpong Kanittanon), தெற்காசிய, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் உராசா மொங்கோல்நவின் (Urasa Mongkolnavin), தகவல் பணிப்பாளர் நாயகம் ஜெய்தாய் உபகார்னிதிக்செட் (Jaithai Upakarnitikset), தெற்காசிய விவகாரங்களுக்கான பணிப்பாளர் கசெம்சன் தோங்சிரி (Kasemsan Thongsiri) மற்றும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல் அமைச்சின் பணிப்பாளர் சடுடீ புங்பொங்டீ (Sadudee Pungpongdee) ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

May be an image of one or more people and dais

Related

Tags: அநுரகுமாரதாய்லாந்துவிசா விலக்கு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

STF அதிகாரிகள் பயணித்த ஜீப் ரயிலுடன் மோதி விபத்து!

Related Posts

STF அதிகாரிகள் பயணித்த ஜீப் ரயிலுடன் மோதி விபத்து!
இலங்கை

STF அதிகாரிகள் பயணித்த ஜீப் ரயிலுடன் மோதி விபத்து!

2026-11-23
வாகன சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை அவசர அறிவிப்பு
இலங்கை

வாகன சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை அவசர அறிவிப்பு

2026-11-23
எண்ணெய்க் கசிவால் மாசடைந்த முத்துவெல்ல கடற்கரை!
ஆசிரியர் தெரிவு

எண்ணெய்க் கசிவால் மாசடைந்த முத்துவெல்ல கடற்கரை!

2026-11-23
தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது
இலங்கை

கஞ்சா கடத்தல் குற்றச்சாட்டில் இரு கலால் அதிகாரிகள் கைது!

2026-11-23
கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்!
இலங்கை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் சோதனை!

2026-11-23
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் 19ஆம் திகதி
இலங்கை

நாடளாவிய ரீதியில் இன்று தொழிற்சங்கப் போராட்டம்!

2026-11-23

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
இலங்கை – தாய்லாந்து இடையில் கைச்சாத்தான விசா விலக்கு ஒப்பந்தம்!

இலங்கை – தாய்லாந்து இடையில் கைச்சாத்தான விசா விலக்கு ஒப்பந்தம்!

0
STF அதிகாரிகள் பயணித்த ஜீப் ரயிலுடன் மோதி விபத்து!

STF அதிகாரிகள் பயணித்த ஜீப் ரயிலுடன் மோதி விபத்து!

0
வாகன சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை அவசர அறிவிப்பு

வாகன சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை அவசர அறிவிப்பு

0
அமெரிக்க இளைஞர்களில் மூன்றில் இருவர் ஸ்மார்ட்போன் பயன்பாடு தூக்கத்தைப் பாதிப்பதாகக் கருத்து!

அமெரிக்க இளைஞர்களில் மூன்றில் இருவர் ஸ்மார்ட்போன் பயன்பாடு தூக்கத்தைப் பாதிப்பதாகக் கருத்து!

0
இளையராஜா இசையில் உருவாகும் ‘மஞ்சணத்தி’ – பிரியங்கா மோகன் எதிர்பார்ப்பு

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: