அமெரிக்காவின் நன்றி பகிர்தல் (Thanksgiving Day) தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் எதிர்வரும் நவம்பர் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் மூடப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமை கொண்டாடப்படும் நன்றி பகிர்தல் தினம் அந்நாட்டின் உத்தியோகப்பூர்வ விடுமுறை தினமாகும்.
இதனையொட்டி, குறித்த இரு தினங்களிலும் தூதரகத்தின் வழமையான அலுவலகப் பணிகள் மற்றும் சேவைகள் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி முதல் தூதரகத்தின் வழமையான செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.















