எஸ். ஹரியதர்ஷனி
ஐரோப்பிய ஒன்றியத்துடனான புதிய ஒப்பந்தம் தொடர்பில் , அடுத்த மாதம் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கருத்து தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
வர்த்தகத் தடைகளை நீக்குவதையும், பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய உணவு மற்றும் பான உற்பத்திகள் மீதான பெரும்பாலான சோதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒப்பந்தங்கள், கடந்த வாரம் நடைபெற்ற இங்கிலாந்து-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் பிரதம மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட வரைவு மீதான விவாதம், எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி பொதுச்சபையில் நடைபெறவுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது .
.பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரதமர் மேற்கொண்ட ஒப்பந்தங்களில் , இளைஞர் அனுபவத் திட்டம் உள்ளடக்கப்படாத நிலையில் , அவை நடைமுறைக்கு வருமா என்பது தொடர்பில் பிரதமர் கேள்விகளை எதிர்கொண்டுள்ளார்.
இதேநேரம் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் ஐரோப்பியர்களுக்கான கல்விக் கட்டணம் குறித்த மேலும் ஒரு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்,
இந்த விவகாரம் கடந்த வார ஒப்பந்தங்களைத் தடம் புரளச் செய்யலாம் என கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் கெமி பேடனோச் ( Kemi Badenoch) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.














