எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக கடந்த சில மாதங்களாக இலங்கையில் வழக்கத்தை விட அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர் மாலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், எல் நினோவின் தாக்கம் இனிவரும் காலங்களில் மாற்றமடையும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 2027 ஜனவரி மாத ஆரம்பம் முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைவீழ்ச்சி கணிசமாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல் நினோ காலநிலை நிகழ்வின் வழக்கமான பண்புகளில் இதுவும் ஒன்று என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது நிலவும் சராசரிக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்வரும் டிசம்பர் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் எனவும், அதன் பின்னர் படிப்படியாக மழைவீழ்ச்சி குறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய முன்னறிவிப்புகளின்படி, எல் நினோ தாக்கம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இந்தக் காலப்பகுதி முழுவதும் இலங்கையில் மழைவீழ்ச்சி குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.















