தெற்கில் உள்ள தீவுகளை நோக்கி வட கொரியா 200 சுற்றுக்கு மேல் பீரங்கி குண்டுகளை வீசியுள்ளதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நடவடிக்கையானது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்து அமைதியை அச்சுறுத்தும் ஆத்திரமூட்டும் செயல் என தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
வட கொரியாவின் இந்த செயற்பாடுகள் பொதுமக்களுக்கோ அல்லது இராணுவத்திற்கோ எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை என தென் கொரிய கூட்டுப் பணியாளர்கள் அறிவிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து இராணுவம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக சியோலில் உள்ள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமைதியாகவும் நிதானமாகவும் செயல்பட வேண்டும் என்றும் பதட்டத்தை மேலும் அதிகரிக்காமல் அர்த்தமுள்ள உரையாடலை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.