ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டத்தில், கட்சி எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்ட குழுவினர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்றிரவு சந்தித்து விசேட கலந்துரையாடலொன்றை நடாத்தியுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவின் கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பேச்சுவார்த்தை நடாத்திய குழுவினர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
இதேவேளை. குறித்த சந்திப்பில் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ, அமைச்சர் காஞ்சன விஜேசேகர, உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.