சீனாவின், ஹெங்யாங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்குண்டு 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் தென் கிழக்குப் பகுதி முழுவதிலும் கேமி புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஹெங்யாங் நகரில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் , பலர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் , குறித்த பகுதியில் தற்போது மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
நிலச்சரிவில் சிக்கி 35 பேர் காணாமல் போன நிலையில் மீட்புக் குழுவினர், அவர்களை தேடி வருகின்றனர் என்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த பகுதிகளில் இடம்பெற்று வருவதாகவும் சீனச்செய்திகள் தெரிவித்துள்ளன.
கேமி புயல் சீனாவை தாக்குதவதற்கு முன்னர் பிலிப்பைன்சை தாக்கியதில் 34 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.