கோவிட் -19 மற்றும் நிமோனியா காச்சல் என்பவற்றுடன் குறுகிய கால இடைவெளியில் போராடிய கப்டன் சேர் ரொம் மூர் (Captain Sir Tom Moore ) மருத்துவமனையில் மரணித்தார் என அவரது மகள்கள் அறிவித்துள்ளனர்.
“எங்கள் அன்பான தந்தை கப்டன் சேர் ரொம் மூரின் (Captain Sir Tom Moore ) மரணத்தை நாங்கள் மிகுந்த சோகத்துடன் அறிவிக்கின்றோம்” என அவரது மகள்கள் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
WW2 என அழைக்கப்படும் இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்த மூத்த இராணுவ அதிகாரியும், அன்பான நிதி சேகரிப்பாளராகவும் விளங்கிய கப்டன் சேர் ரொம் மூர், (Captain Sir Tom Moore ) தனது 99 ஆவது வயதில், முதலாவது பொது முடக்க காலத்தில், நூறு அடிகள் நடந்து 33 மில்லியன்ஸ் பவுண்ஸ்களை சேகரித்து பிரித்தானிய சுகாதார சேவைகளுக்கு வழங்கி சாதனை படைத்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெட்ஃபோர்ட் மருத்துவமனையில் (Bedford Hospital) அனுமதிக்கப்பட்ட, கப்டன் சேர் ரொம் மூர், (Captain Sir Tom Moore ) சிகிச்சை பலனளிக்காது இன்று உயிரிழந்தார். அவர் சில காலமாக நிமோனியாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார், கடந்த வாரம் கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்தார். இந்த சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதனை அடுத்து தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்ததாக வைத்திசாலைத் தரப்பினர் உறுதிப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில், அவரது மகள்களான ஹன்னா மற்றும் லூசி (Hannah and Lucy) ஆகியோர் வெளியிட்ட சோகம் நிறைந்த அறிக்கையில் “எங்கள் அன்பான தந்தை கப்டன் சேர் ரொம் மூரின் மரணத்தை நாங்கள் மிகுந்த சோகத்துடன் அறிவிக்கிறோம். “அவரது வாழ்க்கையின் கடைசி மணிநேரங்களில் நாங்கள் அவருடன் இருந்ததற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” “நாங்கள் அவருடன் மணிக்கணக்கில் உரையாடினோம், எங்கள் குழந்தைப் பருவத்தையும் எங்கள் அருமையான தாயையும் நினைவுபடுத்தினோம். நாங்கள் சிரிப்பையும் கண்ணீரையும் ஒன்றாக பகிர்ந்து கொண்டோம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.