கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்தவும், உலகளாவிய சவால்களை சமாளிக்கவும் ஒன்றிணைந்து பாடுபட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னும் உறுதிபூண்டுள்னர்.
இருவரும் தொலைபேசியில் உரையாடிய பின்னர், தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது,
‘இப்போதுதான் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் ஒரு பெரிய உரையாடலை நடத்தினேன். கொரோனாவின் உலகளாவிய சவால்களுக்கு, பருவநிலை மாற்ற பிரச்சினைகளுக்கு, பொருளாதார பின்னடைவுகளுக்கு மத்தியில் அமெரிக்காவின் புதிய ஆட்சியை வரவேற்றேன்.
தென்கொரியா, அமெரிக்கா கூட்டணியை மேலும் மேம்படுத்தவும் நாங்கள் இருவரும் உறுதி எடுத்துக் கொண்டோம். கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்தவும், உலகளாவிய சவால்களை சமாளிக்கவும் நாங்கள் ஒன்றிணைந்து பாடுபடுவோம்’ என கூறியுள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு பிறகாவது கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகின்றது.