உருமாறிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயற்திறனை அதிகரிப்பது குறித்து, தயாரிப்பு நிறுவனங்கள் ஆய்வில் ஈடுபட்டு உள்ளதாக தடுப்பூசி வெளியீட்டுக்கு பொறுப்பான அமைச்சர் நதிம் ஸஹாவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தற்போதைய தடுப்பூசிகள் புதிய வகை கொரோனாக்களுக்கு எதிராக, குறிப்பாக இவை தீவிர நோயாகவோ அல்லது மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருக்கும்போதோ வீரியமாக இருக்காது என்பது மிகவும் அரிது. எனவே இது ஒரு நல்ல செய்தி.
உலக அளவில் உருமாற்றம் பெற்ற கொரோனா தொற்றுகள் தற்போது சுமார் நான்காயிரம் உள்ளன. எனவே அவற்றுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயற்திறனை அதிகரிப்பது குறித்து தயாரிப்பு நிறுவனங்கள் ஆய்வில் ஈடுபட்டு உள்ளன’ என கூறினார்.
தற்போது குறிப்பாக பிரித்தானியா, தென்னாபிரிக்கா, பிரேஸில் உள்ளிட்ட நாடுகளில் பல வகையில் உருமாறிய கொரோனா தொற்றுகள் காணப்படுகின்றன.