ஒக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ரா செனகா ஆகிய இரண்டு வகை தடுப்பூசிகளை அவசர கால சிகிச்சைக்குப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது.
சீனாவில் முதல் பாதிப்புகள் டிசம்பர் 2019ல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் 210 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியது.
இந்த வைரஸினால் 10 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதில் சுமார் 25 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவைத் தடுக்க, 30க்கும் மேற்பட்ட நாடுகள் தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா செனக்கா ஆகியவற்றின் தயாரிப்பான இருவகைத் தடுப்பு மருந்துகளை அவசர கால சிகிச்சைக்குப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதியளித்துள்ளது.
கொரிய குடியரசு நிறுவனத்தின் அஸ்ட்ரா செனகா மற்றும் இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் தயாரிப்பான தடுப்பு மருந்துகள் இதுவரை சில நாடுகளுக்கு மட்டுமே கிடைத்துவந்தன.
இந்த நிலையில், இவை உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு இனி அனுப்பி வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.