நாடு முழுவதும் ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மியான்மார் இராணுவம் எச்சரித்துள்ளது.
ஆட்சியை கைப்பற்றியுள்ள இராணுவ தலைமை மீது வெறுப்பு அல்லது அவமதிப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் நீண்டகால தண்டனைகளும் அபராதங்களும் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பிற்கு எதிராகவும் ஆங் சான் சூ கி உள்ளிட்ட அதிகாரிகளை விடுதலை செய்யுமாறு ம் வலியுறுத்தி சமீபத்திய நாட்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக மக்கள் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மியன்மாரில் லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தை ஒடுக்குவதற்காக இராணுவத்தினர் அடக்குமுறைகளில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே, மியன்மாரின் ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக சர்வதேச ரீதியில் கண்டனங்கள் வலுப்பெற்றுள்ளன.