மெல்போர்ன் மற்றும் அக்லாந்து நகரங்களில் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை அடுத்த வாரம் தொடங்க இரு நாடுகளும் தீர்மானித்துள்ளன.
இந்நிலையில் பைசர் மற்றும் ஜேர்மனியின் பயோஎன்டெக் உருவாக்கிய 142,000 டோஸ் தடுப்பூசியை முதலில் பெற்றுக்கொண்டுள்ளதாக அவுஸ்ரேலிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
எனவே எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அவுஸ்ரேலிய சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் இன்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை 60,000 பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகள் நியூசிலாந்தை வந்தடைந்துவிட்டதாகவும், அதன்படி முதலில் எல்லையில் பணிபுரிபவர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வார்கள் என அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் அறிவித்துள்ளார்.
தொற்று தொடங்கியதில் இருந்து 25 இறப்புகள் உட்பட 2,330 நோயாளிகள் நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் அவுஸ்ரேலியாவில் 29,000 க்கும் குறைவான நோயாளிகளும் 909 இறப்புகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.