அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்திலுள்ள மூன்று ஸ்பாக்களில் துப்பாக்கிச்சூடு நடத்திய ரோபர்ட் ஆரோன் லாங் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான இந்தத் தாக்குதலுக்கு நிறவெறி காரணமல்ல என்று பொலிஸாரிடன் ரோபர்ட் ஆரோன் கூறியுள்ளார்.
தான் பாலுணர்வுக்கு அடிமையாகிவிட்டதாகவும் ஸ்பா நிலையங்கள் இதற்குத் தூண்டுகோலாக இருப்பதாகக் கருதியதால் ஏற்பட்ட கோபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களில் 6 பேர் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த பெண்கள் இருவர் அமெரிக்கர்கள். எனவே, அமெரிக்காவில் ஆசிய வம்சாவளியினருக்கு எதிராக அண்மைக்காலமாக அதிகரித்து வரும் தாக்குதல்களில் ஒன்றாக இந்தத் துப்பாக்கிச்சூடு கருதப்படுகிறது.
ஸ்பா மையங்களில் தாக்குதல் நடத்திவிட்டு, ஆபாசப் படத் துறை தயாரிப்பு மையங்களில் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் ஃபுளோரிடா மாகாணத்தை நோக்கி ரோபர்ட் ஆரோன் சென்று கொண்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர். எனவே, அவரது வாக்குமூலத்திலும் உண்மை இருக்கலாம் என நம்பப்படுகின்றது.