வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த தாயும் மகளும் வீட்டில் இருந்த நிலையில், கணவனால் வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த அவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாள்வெட்டில் ஈடுபட்ட நபர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வவுனியா பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.