ஜேர்மனியில் முடக்க கட்டுப்பாடுகளை எதிர்த்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மேற்கொண்ட போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.
இந்தபோது போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இருப்பினும் போராட்டக்காரர்கள் முகக்கவசம் அணிய மறுப்பது மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உட்பட மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுவதற்காக சுகாதார நடைமுறைகளை மீறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியா மற்றும் அமெரிக்காவை ஒப்பிடும்போது ஜேர்மனியில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை பின்தங்கியுள்ளது. இது முடக்க கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் தாக்கம் செலுத்தும் நிலையில் குறித்த போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை நாடாளாவிய ரீதியில் முடக்க கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது குறித்து நாளை திங்கட்கிழமை பிராந்திய தலைவர்கள் ஆலோசிக்க உள்ளனர்.