ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் யூசெப் அல் ஓதெமைனுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் தொலைபேசியூடாக இடம்பெற்றதாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு அறிவித்துள்ளது.
இதன்போது, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையில் வாழுகின்ற முஸ்லிம் சமூகத்துடனான உறவுகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.