இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 47 ஆயிரத்து 9 பேர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனைனயடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 16 இலட்சத்து 45 ஆயிரத்து 719 ஆக அதிகரித்துள்ளது.
இதில் ஒரு கோடியே 11 இலட்சத்து 49 ஆயிரத்து 324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 3 இலட்சத்து 36 ஆயிரத்து 392 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் நேற்று ஒரேநாளில் 213 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 60 ஆயிரத்து 3 ஆக அதிகரித்துள்ளது.