தான் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது, அப்போதைய அரசாங்கம் கொழும்பை சுத்தமான மற்றும் அழகான நகரமாக மாற்ற நடவடிக்கை எடுத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர், சமூக ஊடகங்களில் விமர்சிப்பவர்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான தங்கள் பொறுப்பை வெறுமனே பேசாமல் அதனை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து இன்று அனைவரும் விவாதித்து வருவதாகவும், அதற்காக பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் அழிவு குறித்து கருத்து தெரிவிக்காமல் அனைவரும் தங்கள் பொறுப்பை நிறைவேற்றினால் சுற்றுச்சூழலை எளிதாக பாதுகாக்க முடியும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.