வடகொரியாவின் அண்மைய ஏவுகணை சோதனை, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வடகொரியா கடந்த வார இறுதியில், குறுகிய தூர ஏவுகணை சோதனை நடத்தியதாக, வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
வடகொரிய தலைவரின் சகோதரி கிம் யோ ஜாங், அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சில நாட்களிலேயே இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.
இந்தநிலையில், இதுகுறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகையில், ‘புதிய நிர்வாகம், பேச்சு வார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சலுகைகளை வடகொரியா புறக்கணித்து உள்ளதால் ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.
எனினும், இந்த ஏவுகணை சோதனை, பேச்சுவார்த்தையில் கதவுகளை மூடுவதாக ஜோ பைடன் நிர்வாகம் கருதவில்லை’ என கூறினர்.