கொழும்பில் போதைப்பொருள் பாவனை மிகவும் அதிகரித்து வருகின்றமை மிகவும் கவலையளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சமூக உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனையானது குற்றச் செயலன்றி ஒரு நோயாக கருதப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வளிக்கும் சேவையை அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து சிறப்பாக முன்னெடுப்பார்கள் என தான் நம்புவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்களுக்கான சிறப்பான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதே தமது இலக்கென்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.