ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை பெரும்பான்மையான நாடுகள் ஆதரிக்கவில்லை என்பது தெளிவாகின்றது என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையில் கடந்த அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து இலங்கை பல விளைவுகளை எதிர்கொள்கிறது என்றும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் நாட்டைக் காட்டிக் கொடுக்காது என்றும் நாட்டின் இறையாண்மை மற்றும் மக்களின் பாதுகாப்பிற்காகவே இந்த அரசாங்கம் எப்போதும் செயற்படும் என்றும் கூறினார்.
இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின்போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக மொத்தம் 22 நாடுகள் வாக்களித்தது.
மேலும் குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத இந்தியா உள்ளிட்ட நாடுகள் தமக்கு ஆதரவு வழங்கியதாக அண்மையில் அவர் தெரிவித்த கருத்து கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.