70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு புதிய மாறுபாடுகளிலிருந்து பாதுகாக்க கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கலாம் என தடுப்பூசிகளுக்கான அமைச்சர் நாதிம் ஸாஹாவி தெரிவித்துள்ளார்.
70 வயதிற்கு மேற்பட்டவர்கள், உடல்நலம் மற்றும் சமூக பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் மருத்துவ ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முதல் அளவுகள் செல்லும் என அவர் தெரிவித்தார்.
இந்த தடுப்பூசி போடும் பணிகள் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரித்தானியாவில், 29 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இப்போது ஒரு தடுப்பூசியின் முதல் அளவைக் கொண்டுள்ளனர்.