இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான யூசுப் பதானிற்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
லேசான அறிகுறிகளுடன் தொற்று இருப்பது உறுதியானது என யூசுப் பதான் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
வீதி பாதுகாப்பு கிரிக்கெட் தொடரில் இந்தியா லெஜெண்ட்ஸை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய 38 வயதான யூசுப் பதான் சமீபத்தில் ராய்ப்பூரிலிருந்து வீடு திரும்பிய நிலையில் கொரோனா தொற்று உறுதியானது.
இதேவேளை இந்தியா லெஜெண்ட்ஸை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய சச்சின் டெண்டுல்கரும் நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.