இந்த வாரம் மேலும் 3 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
கடந்த வாரம் மட்டும் மொத்தம் 400,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.
அதன்படி சனிக்கிழமை நிலவரப்படி, 7.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் முதல் டோஸ் தடுப்பூசி பெற்றதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
உலகளவில் 08 ஆவது அதிக பாதிப்பு ஏற்பட்ட நடன பிரான்ஸில் கொரோனா தொற்றினால் பதிவான இறப்பு எண்ணிக்கை 95,000 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.