குரேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, குரேஷியாவில் இரண்டு இலட்சத்து 51ஆயிரத்து 237பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 52ஆவது நாடாக விளங்கும் குரேஷியாவில், இதுவரை இரண்டு இலட்சத்து 67ஆயிரத்து 222பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்தாயிரத்து 893பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 321பேர் பாதிக்கப்பட்டதோடு 21பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 10ஆயிரத்து 92பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 121பேரின் கவலைக்கிடமாக உள்ளது.