ஃபைஸர் அல்லது அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் ஒரு டோஸ், பராமரிப்பு இல்லங்களில் 62 சதவீத கொரோனா வைரஸ் தொற்றுநோய்களை தடுத்து நிறுத்துவதில் பயனுள்ளதாக இருந்ததாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
லண்டன் யுனிவர்சிட்டி காலேஜில் (யு.சி.எல்) ஒரு குழு, இங்கிலாந்தில் சராசரியாக 86 வயதைக் கொண்ட 10,000 பெரியவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
தடுப்பூசிக்குப் பிறகு வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து யு.சி.எல் இன் டாக்டர் மேடி ஷ்ரோத்ரி கூறுகையில், ‘இரண்டு தடுப்பூசிகளும் பலவீனமான, வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன’ என கூறினார்.
310 பராமரிப்பு இல்லங்களில் 65 வயதுக்கு மேற்பட்ட 10,412 நீண்டகால குடியிருப்பாளர்களுக்கான கொரோனா வைரஸ் சோதனை முடிவு தரவுகளை இது ஆய்வு செய்தது.