முலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் டிடிவி தினகரன் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து 5 பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக விழுப்புரம் தாலுகா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோதல் உருவாகும் வகையில் பேசுதல், உள்நோக்குடன் ஒருவர் குறித்து அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.