ஊவா மாகாண அமைச்சுகளின் விடயதானங்களிலிருந்து தமிழ் கல்விப் பிரிவு நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்த ஊவா மாகாண ஆளுநர் A.J.M.முஸம்மிலினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஊவா மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு , நீர் வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள், கூட்டுறவு விவகாரம் மற்றும் தமிழ் கல்வி தொடர்பான அமைச்சு என ஏற்கனவே இருந்த அமைச்சின் விடயங்களில் இருந்து தமிழ் கல்விப் பிரிவு நீக்கப்பட்டுள்ளது.