அடிப்படைவாத முகநூலில் பதிவிட்டமை தொடர்பாக மட்டக்களப்பு காத்தான்குடியில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடியில் உள்ள அவரது வீட்டில் வைத்தே இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மூன்று மாதகால பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடியில் பொதுச் சுகாதார உத்தியோகத்தராகக் கடமையாற்றிவரும் 38 வயதுடைய குறித்த நபர், முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பு ஒன்றின் அடிப்படைவாதக் கொள்கைகளை முகநூலில் தரவேற்றி வந்ததுடன் அந்த அமைப்புடன் தொடர்புகளைப் பேணிவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.